சாலையில் பெண்ணை படுக்கப் போட்டு சரமாரியாக தாக்கிய இளைஞர்..!! சண்டை முடிந்ததும் ஒரே பைக்கில் ஏறிச்சென்ற ஜோடி..!! வைரல் வீடியோ உள்ளே..!!
ஜோடிகள் சண்டை போட்டுக் கொள்ளும் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பார்த்திருப்போம். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சாலையில் மாறி மாறி அடித்துக் கொண்ட ஜோடி, பின்னர் கூட்டம் கூடியதும் பைக்கில் ஒன்றாகச் செல்கிறார்கள். வைரலான வீடியோவில், சாலையின் ஓரத்தில் ஒரு ஜோடி நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அநேகமாக அவர்கள் கணவன், மனைவி அல்லது காதலர்களாக இருக்கலாம். இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து, பின்னர் தகராறாக மாறியது. தகராறு முற்றியதில், அந்த இளைஞன், பெண்ணை அடிக்க ஆரம்பித்தான்.
அந்த பெண்ணும் இளைஞரை அடித்தார். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர். சண்டையின்போது அறை, அடி என மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர். சிறிது நேரத்தில் சண்டை பெரிதாக மாறி, சாலையில் உருண்டு விழுந்து சண்டை போடுகின்றனர். இவர்களது சண்டையின் உச்சகட்டத்தை அங்கிருந்த மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். இதனையடுத்து, இருவரும் ஒரே பைக்கில் ஏறி அந்த இடத்தை விட்டு வெளியேறினர். இந்த வீடியோ எங்கிருந்து வந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.