முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆண் நண்பருடன் இரண்டு நாட்கள் உல்லாசம்.. திடீரென மயங்கி விழுந்த இளம் பெண் பலி..!!

A young beautician, who had been flirting with her boyfriend for 2 days, suddenly fainted and died.
07:03 PM Dec 10, 2024 IST | Mari Thangam
Advertisement

தனது ஆண் நண்பருடன் அறை எடுத்து 2 நாட்கள் தொடர்ச்சியாக உல்லாசமாக இருந்த இளம் பெண் பியூட்டிஷன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Advertisement

திருச்சி மாவட்டம் செம்பட்டு திருவலச்சி பட்டியை சேர்ந்த இளம் பெண், திருச்சியில் பியூட்டிஷியனாக பணியாற்றி வந்தார். அந்த பெண் தனது பணிக்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த 5ம் தேதி திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். பிறகு சூளைமேடு சண்முகம் சாலையில் உள்ள கில் நகர் 2வது தெருவில் அறை எடுத்து வசித்து வரும் தனது ஆண் நண்பர் முகமது நபிக் (31) என்பவருடன் 2 நாள் தங்கி இருந்தார். அவருடன் 2 நாட்கள் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது ஆண் நண்பருடன் அளவுக்கு அதிகமாக பீர் குடித்தும், அதிகளவில் சிகரெட் பிடித்ததாக கூறப்படுகிறது.

ஆண் நண்பருடன் 7ம் தேதி காலை 11 மணி வரை உல்லாசமாக இருந்துவிட்டு இந்து, கோயம்பேட்டில் பணியாற்றும் தனது தோழி ஆர்த்தியுடன் பாண்டிபஜார் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மதுரா அழகர் லாட்ஜுக்கு வந்துள்ளார். லாட்ஜுக்கு வந்த சிறிது நேரத்தில் இந்துவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அடுத்த சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது தோழி ஆர்த்தி, உடனே கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு டாக்டர்கள் இந்துவை ஆய்வு செய்த போது, அவரது இதய துடிப்பு குறைவாக இருப்பதாகவும், உடனே மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி பரிந்துரைத்தனர். அதன்படி, அவசர அவசரமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு இந்து ஆய்வு செய்த டாக்டர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இந்து இறந்துவிட்டதாக கூறினர். தகவலின்படி அங்கு வந்த பாண்டிபஜார் போலீசார் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பெண்ணின் இறப்பு குறித்து திருச்சியில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளனர். மேலும், அவருடன் இருந்த தோழி ஆர்த்தி மற்றும் ஆண் நண்பரான முகமது நபிக் ஆகியோரை அழைத்து சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், இந்து இறப்பு குறித்து முழுமையாக தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Read more ; சுகர் லெவல் கட்டுக்குள் இருப்பது முதல் வெயிட் லாஸ் வரை.. தினமும் இரவில் இதை சாப்பிடுங்க..!! சீக்கிரமே நல்ல ரிசல்ட் கிடைக்கும்

Tags :
murdersexual relationshipTrichy
Advertisement
Next Article