முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புயலின் தீவிரத்தை உணர்த்தும் எச்சரிக்கை கூண்டு!… 5 மற்றும் 7 என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

08:29 AM Dec 04, 2023 IST | 1newsnationuser3
Advertisement

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு `மிக்ஜம்' என பெயரிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. இது நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் புயலாக கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், புயல் தொடர்பாக அதிக காற்று வீசுவதை குறிக்கும் வகையில் காட்டுப்பள்ளி, எண்ணூர் காமராஜர், சென்னை, கடலூர், புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அதேபோல், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இந்த புயல் எச்சரிக்கை கூண்டு என்பது புயலின் தீவிரத்தை உணர்த்த ஏற்றப்படுகிறது. இதில் மொத்தம் 11 படிநிலையிலான கூண்டுகள் ஏற்றப்படும். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படும். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். இந்த அனைத்தையும் பற்றிக் காண்போம்.

கூண்டு எண் 1: புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது என்பது பொருள். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும். கூண்டு எண் 2: இது புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும். கூண்டு எண் 3: திடீர் காற்றோடு மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. கூண்டு எண் 4: துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து நேர வாய்ப்பு உண்டு.

கூண்டு எண் 5: புயல் உருவாகி உள்ளது. துறைமுகத்தின் இடதுபுறம் கரையைக் கடக்கும். கூண்டு எண் 6: புயல் வலதுபுறமாக கரையைக் கடக்கும் போது துறைமுகம் கடுமையான வானிலைக்கு உள்ளாகும். கூண்டு எண் 7: துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை. கூண்டு எண் 8: இது மிகுந்த அபாயம் என்பதை குறிக்கும். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும். கூண்டு எண் 9: புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். கூண்டு எண் 10: அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூண்டு எண் 11 இது வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும்.

Tags :
5 மற்றும் 7 என்பதன் அர்த்தம் என்ன ?Warning cagewhat 5 and 7 mean?எச்சரிக்கை கூண்டுபுயலின் தீவிரம்
Advertisement
Next Article