முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புயலின் தீவிரத்தை உணர்த்தும் எச்சரிக்கை கூண்டு!. எண் 1 முதல் 11 வரை!. எதை குறிக்கிறது தெரியுமா?

A warning cage indicating the intensity of the storm! Number 1 to 11!. Do you know what that means?
07:30 AM Oct 16, 2024 IST | Kokila
Advertisement

Warning cage: புயல் கூண்டு என்பது மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துறைமுகங்களில் ஏற்றப்படும் ஒன்றாக உள்ளது. புயல் உருவாகும் சூழல் முதல் உச்சக்கட்ட எச்சரிக்கை வரை உள்ள நிலையை குறிக்கும் வகையில் மொத்தம் 11 வகை புயல் எச்சரிக்கை கூண்டுகள் உள்ளன.

Advertisement

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் கூண்டு என்பது மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துறைமுகங்களில் ஏற்றப்படும் ஒன்றாக உள்ளது.

புயல் உருவாகும் சூழல் முதல் உச்சக்கட்ட எச்சரிக்கை வரை உள்ள நிலையை குறிக்கும் வகையில் மொத்தம் 11 வகை புயல் எச்சரிக்கை கூண்டுகள் உள்ளன. ஒவ்வொரு கூண்டும் புயல் நிலையின் அறிவிப்பை வெளிப்படுத்தும். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள். அந்த வகையில் 11 கூண்டு வகைகள் புயலின் எந்த நிலையை குறிக்கிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள். இரண்டாம் எண் கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்றும் உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை என்றும் அர்த்தம். ஜந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பது பொருள். ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, புயல் துறைமுகத்தில் வலதுபக்கமாக கரையைக் கடக்கும் என்பது பொருள்.

ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் வலுபெற்று தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று அர்த்தம். மேலும், வலுபெற்ற புயல் துறைமுகத்தின் இடதுபக்கமாக கடக்கும் என்று அர்த்தம். ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் வலுபெற்று தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது, துறைமுகத்தின் வலதுபக்கமாக கடக்கும் என்று பொருள். இதனால் துறைமுகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்பது பொருள்.

பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டுக்கு , அதி தீவிர புயலாக உருவாகியுள்ள புயல் துறைமுகம் அல்லது அருகே கடந்துசெல்லும் போது பெரிய அபாயம் ஏற்படும் என்று அர்த்தம். 11 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டிற்கு உச்சக்கட்ட எச்சரிக்கையை குறிக்கும். அதி தீவிர புயலால் வானிலை மையத்துடன் தகவல் துண்டிக்கப்பட்டது என்பது பொருள். இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயலால் பெரும் சேதம் ஏற்படும்.

Readmore: சுழலும் வங்கக்கடல்!. தமிழ்நாடு, புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!.

Tags :
meansNumber 1 to 11stormWarning cage
Advertisement
Next Article