For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? 29 ஆண்டுகளாக பெண்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமம்!!

As only women live in the village of Umoja, Kenya, this post takes a look at their lifestyle
05:22 PM Jun 20, 2024 IST | Mari Thangam
ஆண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்  29 ஆண்டுகளாக பெண்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமம்
Advertisement

கென்யாவின் உமோஜா என்ற கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கை முறை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்

Advertisement

பெண்களின் சுதந்திரம், நகரங்களிலேயே சர்வசாதாரணமாக சூறையாடப்படுகிறது. குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து தப்பிக்க இன்றளவும் பெண்கள் போராடி வருகிறார்கள். எதிர்க் குரல் கொடுத்து வருகிறார்கள். ’ஆண்கள் இல்லாத உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும்?' என்று பல பெண்கள் மனதுக்குள் ஆசைப்படுகிறார்கள். உண்மையிலேயே ஆண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்குத் தங்களின் செயலால் பதிலளிக்கிறது, கென்யா நாட்டின் ஒரு குக்கிராமம்.

பெண்கள் மட்டுமே இந்த கிராமத்தில் வசிக்கிறார்கள். கிராமத்தை நடத்துகிறார்கள. இந்த கிராமம் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இங்கு வசிக்கும் பெண்கள் அனைவரும் மாசாய் சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் சம்பூர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். முன்னர் இருந்து சம்பூர் இனப் பெண்கள் கணவனின் சொத்தாகக் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையில் அவர்களுக்கு மிகக் குறைவான உரிமைகள் உள்ளன. அவர்களுக்கு நில உரிமையோ விலங்கு உரிமையோ கிடையாது. பல சமயங்களில் இந்தப் பெண்கள் வயது முதிர்ந்த ஆண்களுடன் குழந்தைத் திருமணங்களுக்குத் தள்ளப்படுகிறார்கள்.  இதுமட்டுமின்றி, குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களையும் சந்திக்கின்றனர்.

 1990 களில்,  பிரிட்டிஷ் வீரர்கள் இந்த இனப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பிறகு அவர்களது கணவர்கள் அவர்களை ஏற்க மறுத்துவிட்டனர். அப்படி ஒரு குறிப்பிட்ட அளவிலான பெண்களை தங்களின் குடும்பங்களும் கணவன்மார்களும் ஒதுக்கி வைத்துள்ளனர். அதோடு அந்த காலத்தில் சம்பூர் பழங்குடியினப் பெண்களால் சுமார் 1400 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அப்போது ரெபெக்கா லோலோசோலி என்ற பெண்ணும் இதே சித்திரவதையை அனுபவித்தாள். யாரும் அவள் சொல்வதைக் கேட்காததால், அவர் சுமார் 15 பெண்களுடன் உமோஜா என்ற கிராமத்தை நிறுவினார். உமோஜா என்றால் ஒற்றுமை. இந்த கிராமத்தில் பெண்களிடையே ஒற்றுமை உள்ளது.

ஆண்கள் அவர்களை புரிந்துகொள்ளாமல் ஒதுக்கிவைத்ததால் இங்கு ஆண்கள் நுழைவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் என 200 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்துக்குள் நுழைய ஆண்களுக்கு அனுமதியில்லை. இங்கு வாழும் சம்புரு பெண்கள், தங்களின் வாழ்வாதாரத்துக்குப் பாரம்பர்ய நகைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். அங்கே வரும் பெண் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்கும் வசதி அளித்து, கட்டணம் வசூலிக்கின்றனர். அந்த வருமானத்தில், குழந்தைகளுக்கு ஒரு பள்ளியை உருவாக்கிச் சிறப்பாக நடத்திவருகின்றனர்.

கல்வி மட்டுமே எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நம்புகிறேன். எங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க விரும்புகிறோம். பெண்களை மதிக்கும் சமூகமாக அவர்களை உருவாக்குவோம். இந்தப் பள்ளியில் எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள பிற கிராமங்களிலிருந்தும் குழந்தைகள் வந்து படிக்கிறார்கள். நிச்சயம் இவர்களின் வருங்காலம் பிரகாசமாக இருக்கும் என்று உறுதியுடன் தெரிவிக்கின்றனர் அந்த கிராம பெண்கள்..

இவர்கள் ஒதுக்கிவைத்து 29 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த இனத்து ஆண்களிடம் பிற்போக்கு எண்ணங்கள் இன்னும் நீங்கியபாடில்லை. “எங்கள் வழக்கபடி சம்புரு பெண்கள் தனியாக வாழக்கூடாது. பெண்கள் மட்டுமே ஒரு கிராமத்தை நடத்தினால், அது பிரச்னையில்தான் முடியும். இது அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் இப்படி வாழ்வதால் எந்த அர்த்தமும் இல்லை” என்று கூறுகிறார்கள். இதையெல்லாம் புறந்தள்ளி வெற்றிகரமாக வாழ்ந்துவருகிறார்கள் உமொஜா கிராமத்துப் பெண்கள்.

Read more ; கள்ளச்சாராய விவகாரம்..!! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி..!!

Tags :
Advertisement