For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இருள் சூழும் முழு சூரிய கிரகணம்!… இந்தியாவில் காண முடியுமா?… எங்கெல்லாம் பார்க்கலாம்?

05:20 AM Apr 08, 2024 IST | Kokila
இருள் சூழும் முழு சூரிய கிரகணம் … இந்தியாவில் காண முடியுமா … எங்கெல்லாம் பார்க்கலாம்
Advertisement

SOLAR ECLIPSE: சந்திர கிரகணத்தை தொடர்ந்து 2 வாரங்களுக்கு பிறகு நிகழும் நிலவை முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.

Advertisement

சூரிய குடும்பத்தில் முழு சூரிய கிரகணத்தைக் காணக்கூடிய ஒரே கிரகம் பூமி மட்டுமே. ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் இன்று (ஏப்ரல் 8 ஆம் தேதி) நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

வட அமெரிக்காவின் சில பகுதிகளில் முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி, இரவு 9:12 மணிக்கு தொடங்கி அதிகாலை 1:25 மணிக்கு முடிவடையும். இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருக்கும். சூரிய கிரகணத்தின் சூதக் காலம் 12 மணி நேரத்திற்கு முன் தொடங்குகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் காண முடியாது. 2031ல் நிகழும் கிரகணத்தையே இந்தியாவில் காணமுடியும்.

இன்றைய சூரிய கிரகணம் கனடா, அமெரிக்கா முதல் மெக்சிகோ வரை தெரியும். முந்தைய சூரிய கிரகணங்களை விட இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம் மிக அதிகமாக இருக்கும். இது போன்ற ஒரு கிரகணம் பசிபிக் பகுதியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 2.23 லட்சம் மைல்கள் தொலைவில் காணப்படும். இதனால் சந்திரன், பூமிக்கு அருகே காணப்படுவதால் வானில் சந்திரன் பெரியதாக தெரியும்.

இதனால் சூரிய கிரகணத்தின் போது இருள் இருக்கும். இதற்கு முன்னர் இது போன்ற சூரிய கிரகணம் 1973 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இதன் பின்னர் 2150 ஆம் ஆண்டு வரை இது போன்ற ஒரு அரிய கிரகணம் நடைபெறாது என்கிறார்கள். சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம், முழு சூரிய கிரகணம் இணைந்த சூரிய கிரகணம் என 4 வகைகள் உள்ளன.

இதில் நிலவு முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணமே இன்று நடைபெறுகிறது. கிரகண நாளில் எந்த சுப காரிய நிகழ்வையும் நடத்தக்கூடாது. கிரகணத்தின் போது நகங்களை வெட்டுவது, முடியை சீவுவது, பல்துலக்குவது போன்ற செயல்களை தடுக்கவும். கிரகணத்தின் போது தூங்க கூடாது என்பது நம்பிக்கையாக உள்ளது.

இருப்பினும், இந்திய நேரப்படி இரவில் இந்த சூரிய கிரகணம் நடப்பதால், தோஷ காலம் இந்தியாவில் செல்லாது. சூரிய கிரகணத்தின் போது நாம் என்ன செய்யலாம்? இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது என்பதால் அன்றாட பணிகளை நாம் தாராளமாகச் செய்யலாம். எந்த ஒரு தடையும் இல்லை. சமய நிகழ்வுகளுக்கும் தடை இல்லை.

Readmore: IPL 2024: சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! அணியில் இருந்து திடீரென விலகிய முக்கிய வீரர்.!!

Advertisement