For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

16 வயது மாணவனை காரில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியை..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

04:42 PM Apr 20, 2024 IST | Chella
16 வயது மாணவனை காரில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்த ஆசிரியை     வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த ஜெசிகா (37) என்பவர், இந்தாண்டு பள்ளி மாணவர் ஒருவரை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, 2ஆம் நிலை பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தையின் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக ஜெசிகா மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரது குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்ததால், ஜெசிகாவும் மாணவரும் காரில் நிர்வாணமாக இருந்தபோது நியூ ஜெர்சி மீன் மற்றும் வன ஆய்வாளர்களால் பிடிக்கப்பட்டனர்.

Advertisement

ஜெசிக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவலின் அடிப்படையில், விசாரணையில் ஜெசிக்கா குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதாவது, அரசு வனத்துறைக்கு சொந்தமான 6,393 ஏக்கர் தோட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குறைந்தபட்சம் 5 முறை பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டதாக ஜெசிகா கூறியுள்ளார்.

விசாரணையில், இருவரும் வழக்கமாக மாணவரின் காரின் பின் இருக்கையில் அமர்ந்து உடலுறவு கொள்வதாக கூறியுள்ளார். அந்த மாணவனுக்கு தற்போது 16 வயது ஆகிறது. மாணவனுக்கு 18 வயது ஆகாததால் ஜெசிகாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெசிகாவை கடந்த திங்கட்கிழமை காவலில் எடுத்து விசாரித்தனர். அவரிடம் ஒரு வார காலம் போலீஸ் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, பள்ளியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இதுவரை அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் அவரை உடனடியாக பள்ளியில் இருந்து நீக்குகிறது. விசாரணையின் போது அதிகாரிகளுக்கு எங்கள் நிர்வாகம் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும். ஜெசிகா ஆண்டுக்கு சுமார் $41,000 சம்பாதிப்பது தெரியவந்தது. போலீசாரால், கைது செய்யப்பட்ட பிறகு, பள்ளி இணையதளத்தில் இருந்த ஜெசிகாவின் சுயவிவரத் தகவல்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. அந்த பள்ளியில் ஜெசிகா கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததது குறிப்பிடத்தக்கது.

Read More : களைகட்டும் டாஸ்மாக் கடை விற்பனை..!! நாளை மீண்டும் லீவு..!! இன்றே குவிந்த மதுப்பிரியர்கள்..!!

Advertisement