Family Cars : குடும்பமா ட்ராவல் பண்ணனுமா.. அட்டகாசமான 7 சீட்டர் கார் வந்தாச்சு! அதுவும் 6 லட்சத்துல..
அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்கள் செல்ல ஏதுவாக விசாலமான மற்றும் சௌகரியமான கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிதாக மற்றும் அப்டேட் செய்யப்பட்ட 7-சீட்டர் மாடல்களை அறிமுகப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றன.
சந்தையில் ஏழு இருக்கைகள் கொண்ட கார் பற்றி பேசினால், மாருதி சுஸுகியின் எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகா கார்கள் இந்த லிஸ்டில் கண்டிப்பாக வரும். இந்த கார்களின் ஆரம்ப விலை தோராயமாக ரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை இருக்கும். சாதாரண மக்களின் பட்ஜெட்டில் இந்த கார்கள் வராது. ஆனால் ரெனால்ட் நிறுவனம் குறைவான பட்ஜெட்டுக்கு ஏற்ற 7 சீட்டர் கார் ஒன்றை வழங்குகிறது. ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஒரு பேசிக் எம்.வி.பி. கார் ஆகும். இதில் 7 பேர் வசதியாக அமர்ந்து செல்ல இருக்கைகள் உள்ளன. குடும்பத்துடன் சொகுசாகப் பயணிக்க இந்தக் கார் பொருத்தமாக இருக்கும்.
ரெனால்ட் ட்ரைபர் எப்படி இருக்கிறது?
ரெனால்ட் ட்ரைபரின் எஞ்சின் 96 என்எம் முறுக்குவிசையையும், அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் கொடுக்கக்கூடிய இந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் (AMT) ஆப்ஷன்கள் உள்ளன. நல்ல பூட் ஸ்பேஸ் கொண்ட ரெனால்ட் ட்ரைபர் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டது. மற்ற என்ட்ரி லெவல் 7 சீட்டர் கார்களில் இருப்பதைவிட பெரிய ஹேட்ச்பேக்கையும் கொண்டிருக்கிறது.
ரெனால்ட் ட்ரைபரின் எஞ்சின் 96 என்எம் முறுக்குவிசையையும், அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் கொடுக்கக்கூடிய இந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் (AMT) ஆப்ஷன்கள் உள்ளன.
ட்ரைபர் அம்சங்கள்
அதன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 20.32 செமீ டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ மற்றும் ஃபோன் கண்ட்ரோல்கள், எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட் அக்சஸ் கார்டு, புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல், 6-வே அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், சென்ட்ரல் கூல்டு. கன்சோலில் சேமிப்பு மற்றும் 182மிமீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.
மேலும், குடும்பத்துடன் செல்ல கார் வாங்கும்போது பாதுகாப்பு முக்கியத் தேவை. அதை உறுதிசெய்ய 4 ஏர்பேக்குகள் உள்ளன. Global NCAP 4 இந்தக் காருக்கு 4 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில், குழந்தைகளுக்கு 3 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்-க்கு ஏற்ற வகையில், இந்த காரில் விலை உள்ளது. ரெனால்ட் ட்ரைபர் விலை சுமார் ரூ.5.99 லட்சத்தில் தொடங்கி டாப் மாடலுக்கு சுமார் ரூ.8.12 லட்சம் வரை செல்கிறது.
Read more ; கருப்புப் பண விவகாரம்!. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பிரபலத்திடம் ED விசாரணை!.