For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேங்கைவயல் வழக்கில் திடீர் திருப்பம்..!! 750 நாட்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! இந்த 3 பேர் தான் காரணம்..!!

The Tamil Nadu government has informed the court that three people were involved in the Vengaivayal incident.
02:01 PM Jan 24, 2025 IST | Chella
வேங்கைவயல் வழக்கில் திடீர் திருப்பம்     750 நாட்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை     இந்த 3 பேர் தான் காரணம்
Advertisement

வேங்கைவயல் சம்பவத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 26.12.2022இல் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இது தொடர்பாக விசாரிக்க காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

பின்னர், இந்த வழக்கில் சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், திடீர் திருப்பமாக தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, வேங்கைவயல் சம்பவத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. வேங்கைவயலை சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி மனிதக் கழிவை தண்ணீரில் கலந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அறிக்கையை மனுவாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளது.

Read More : ”ரூ.15 லட்சம் கேட்டது உண்மையா”..? ”தைரியமா சொல்லுங்க”..!! புதிய மாவட்ட செயலாளர்களிடம் விஜய் ரகசிய விசாரணை..!!

Tags :
Advertisement