குளிர்பானம் குடித்து 5 வயது சிறுமி இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்..!! பெற்றோரிடம் நஷ்ட ஈடு கேட்கும் நிறுவனம்..!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கனிகிலுப்பை கிராமத்தில் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த 5 வயது சிறுமி, குளிர்பானம் குடித்து இறக்கவில்லை என்று குளிர்பான நிறுவனத்தின் உதவி மேலாளர் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜோதிலட்சுமி. இந்த தம்பதிக்கு ரித்தீஷ் என்ற 8 வயது மகனும், காவியாஸ்ரீ என்ற 5 வயது மகளும் உள்ளனர்.
இந்நிலையில், காவியா ஸ்ரீ கடந்த மாதம் 10ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடையில் ரூ.10 கொடுத்து, டெய்லி பிரஸ் என்ற மாம்பழ குளிர்பான பாட்டிலை வாங்கி வந்து குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி மூக்கிலும் வாயிலும் நுரை வந்து சிறுமி மயங்கியுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை ராஜ்குமார் டெய்லி பிரஸ் குளிர்பானம் குடித்து குழந்தை இறந்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து சிறுமி மரணம் குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையில், டெய்லி பிரஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தீவிர ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், நாமக்கல் பகுதியில் செயல்படும் டெய்லி பிரஸ் ப்ரூட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உதவி மேலாளர் கனகராஜ் மற்றும் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் சிறுமி காவியா ஸ்ரீ டெய்லி பிரஸ் மேங்கோ குளிர்பானத்தை சாப்பிட்டு குழந்தை இறக்கவில்லை என்றும் குளிர்பானம் தரமானது என்றும் சென்னை நேஷனல் புட் லிபரட்டரி சர்டிபிகேட் வழங்கியுள்ளது என்றும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். மேலும், நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்படுத்திய கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட குளிர்பானம் குடித்து 5 வயது சிறுமி உயிர் எழுந்ததாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read More : வீட்டில் அரச மரத்தை வளர்க்கலாமா..? என்னென்ன பிரச்சனைகள் வரும்..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!