For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திடீரென குவிந்த ஆண்கள் கூட்டம்..!! ஜோராக நடந்த விபச்சார தொழில்..!! அதிரடி என்ட்ரி கொடுத்த போலீஸ்..!! கதிகலங்கிய கன்னியாகுமரி..!!

The Kanyakumari police received a tip-off about prostitution of young women in the name of Ayurvedic massage centre.
07:37 AM Nov 04, 2024 IST | Chella
திடீரென குவிந்த ஆண்கள் கூட்டம்     ஜோராக நடந்த விபச்சார தொழில்     அதிரடி என்ட்ரி கொடுத்த போலீஸ்     கதிகலங்கிய கன்னியாகுமரி
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளம்பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக கன்னியாகுமரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

Advertisement

அப்போது அங்கு 2 இளம்பெண்கள், 2 இளைஞர்களுடன் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, அங்கு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்த 23 மற்றும் 30 வயதுடைய 2 இளம்பெண்களையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 23 வயதுடைய இளம்பெண் கேரளாவை சேர்ந்தவர். 30 வயதுடையவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்.

பின்னர், அங்கிருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் சிவகாசியை சேர்ந்த கேமன்ராஜ் (27), நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த சம்சீர் நவாஸ் (38) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஆன்லைன் மூலம் இந்த மசாஜ் சென்டரை தொடர்பு கொண்டு இங்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியதாக நெய்யாற்றின் கரையை சேர்ந்த வைசாகன் (38) என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.

Read More : ரேஷன் கடைகளில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாதம் ரூ.29,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க நவ.7ஆம் தேதியே கடைசி..!!

Tags :
Advertisement