முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தில் திடீர் தீவிபத்து..!! கொளுந்து விட்டு எரிந்ததால் கோவையில் பரபரப்பு..!!

The incident of a government bus carrying passengers suddenly catching fire has caused a stir in Coimbatore.
10:50 AM Oct 24, 2024 IST | Chella
Advertisement

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுரேஷ் என்ற ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். இதில், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில், இந்த பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது, இன்ஜினில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

இதனைக் கண்டதும் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு, பயணிகளை பேருந்தில் இருந்து இறங்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து, பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து பதறியடித்துக் கொண்டு இறங்கினர். பயணிகள் இறங்கிய சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமானது.

ஓட்டுநர் சுதாகரித்துக் கொண்டு உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Read More : தமிழக மருத்துவத் துறையில் பிசியோதெரபிஸ்ட் காலிப்பணியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.1,14,800..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
அரசுப் பேருந்துகோவை மாவட்டம்தீவிபத்துபயணிகள்
Advertisement
Next Article