'வெற்றிகரமான காலம் வரப்போகிறது'!. அதிபராக பதவியேற்ற என் அன்பு நண்பர் டிரம்பிற்கு வாழ்த்துகள்!. பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!.
PM Modi: அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்றுள்ள ‘எனது அன்பு நண்பர்’ டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அதிபர் பதவியேற்பு விழா நேற்று (20.01.2025) இரவு இந்திய நேரப்படி 10:30 மணியளவில் நடைபெற்றது. அமெரிக்காவின் 50வது துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக, 78 வயதான டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். இருவருக்கும் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதே சமயம் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டார். அதேபோல் தொழிலதிபரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் பங்கேற்றார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்றுள்ள ‘எனது அன்பு நண்பர்’ டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளத்தில், எனது அன்பு நண்பரான ஜனாதிபதி @realDonaldTrump அவர்களுக்கு வாழ்த்துகள்! நமது இரு நாடுகளுக்கும் பயனளிப்பதற்கும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். வெற்றிகரமான காலம் வரப்போகிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.
Readmore: எச்சரிக்கை!. சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்கும் HMPV வைரஸ்!. வெளியான அதிர்ச்சி தகவல்!