காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்கும் நபரா நீங்கள்? ஹார்ட் அட்டாக் ஏற்படுமாம்..!! - ஆய்வில் தகவல்
ஒவ்வொரு நாளும் காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். காலை 9 மணிக்கு அலுவலகம் செல்ல 6 மணி முதல் 4, 5 அலாரம் வைத்து அரக்கப் பறக்க எழுந்திருப்போம். இந்த நிலையில், அலாரம் குறித்து இப்போது அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. UVA Health என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் காலையில் அலாரம் வைத்து எழுவோருக்குச் இரத்த அழுத்தம் அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுவாக நாம் தூங்கி எழும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பது இயல்பான ஒன்று தான். ஆனால், நல்லா தூங்கிக் கொண்டு இருக்கும் போது திடீரென அலாரம் அடித்து எழுவது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்களைத் தூண்டி, உடலின் இயற்கையான தூக்கச் சுழற்சியைச் சீர்குலைத்து, தூக்க மந்தநிலைக்கு நம்மைத் தள்ளுகிறது. இதனால் கண் விழித்த பிறகும் சுமார் 2 மணி நேரம் வரை ஒரு வித மந்த நிலையே நமக்கு இருக்கும். நாம் சோர்வாகவே உணர்வோம்.
பாதிப்புகள் ; இது குறித்த விரிவான ஆய்வை வெர்ஜீனியா ஹெல்த் சிஸ்டம் பல்கலைக்கழகத்தின் நர்சிங் மாணவர்கள் நடத்தியுள்ளனர். அதில் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகாலை நேரத்தில் அதிகரித்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்தனர். இது மன ஆரோக்கியத்தையும் மனநிலையையும் பாதிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். போதியளவில் நாம் தூங்காமல் இருந்தால் அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். மேலும் சோர்வு, மூச்சுத் திணறல், பதட்டம், மூக்கில் ரத்த வழிவது மற்றும் தலைவலி ஆகியவையும் கூட ஏற்படும்.
சில நேரங்களில் பக்கவாதம், ஹார்ட் அட்டாக் கூட ஏற்படும். அதிலும் ஏற்கனவே இதய பிரச்சினை உள்ளவர்களுக்கு இது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கார்டியோவாஸ்குலர் பிரச்சனைகள் இருப்போருக்கு இது உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
Read more ; திடீரென வெடித்த 2ஆம் உலகப் போர் குண்டு..!! விமான நிலையத்தில் பரபரப்பு..!! இது வெறும் சாம்பிள் தானாம்..!!