For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆண்களை விட பல மடங்கு அதிகமாக பெண்கள் வேலை செய்கிறார்கள்!! - ஆய்வில் தகவல்

A study conducted by IIMA revealed that women do 7.2 hours of unpaid housework, compared to 2.8 hours for men.
05:55 PM Jul 08, 2024 IST | Mari Thangam
ஆண்களை விட பல மடங்கு அதிகமாக பெண்கள் வேலை செய்கிறார்கள்     ஆய்வில் தகவல்
Advertisement

2.8 மணிநேரம் செலவிடும் ஆண்களுடன் ஒப்பிடும்போது, 7.2 மணிநேரம் சம்பளம் இல்லாமல் பெண்கள் வீட்டு வேலை செய்கிறார்கள் என்று IIMA நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) நேர பயன்பாட்டுக் கணக்கெடுப்பின் (TUS) அடிப்படையிலான ஆராய்ச்சியில், துப்புரவு, சமைத்தல், குழந்தைகளைப் பராமரித்தல் போன்ற அடிப்படை வீட்டுத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதை விட, ஊதியம் பெறும் பெண்கள் ஊதியமில்லாத வீட்டு வேலைகளில் இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் பேராசிரியர் நடத்திய ஆய்வில், 15 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் 7.2 மணிநேரம் ஊதியமில்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகிறார்கள் என்றும் ஆண்களால் 2.8 மணிநேரம் மட்டுமே செலவிட முடிகிறது. இது அவர்களுக்கு “நேரமின்மை” இருப்பதைக் குறிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், ‘பெண்களை விட ஆண்கள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 150 நிமிடங்களை ஊதியம் பெறும் வேலையில் அதிகம் செலவிடுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் 24 சதவீதம் அதிகமாக ஓய்வு நேரத்தைக் கொண்டிருப்பதாகவும் ஊதியம் பெறும் பெண்களை விட ஊதியம் பெறும் ஆண்கள் 72 சதவிகிதம் அதிகமாக வேலை செய்வதைக் காண்கிறோம் என்றும் இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வேலைகள் மற்றும் தொழில்களில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை பொருட்படுத்தாமல், பெண்கள் தங்கள் நேரத்தை வீட்டுப் பொறுப்புகளுக்காக செலவிடுகிறார்கள் என்றும் இது அடிக்கடி பெண்கள் இரண்டாவது ஷிப்டில் வேலை செய்வதை குறிக்கிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் சமையல் ஆற்றல் உள்ளிட்டவைகள் பெண்களின் நேரச் சுமையைக் குறைக்கும் என்றும் எல்பிஜி அல்லது பிற சுத்தமான சமையல் எரிபொருளைப் பயன்படுத்தும் குடும்பங்களில் உள்ள பெண்களை ஊதியம் இல்லாத வீட்டுச் செயல்பாடுகளில் குறைந்த நேரத்தை செலவிடுவதை எடுத்துக்காட்டுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி அல்லது பிற சுத்தமான சமையல் எரிபொருளைப் பயன்படுத்தும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு பாரம்பரிய எரிபொருளைப் பயன்படுத்துபவர்களை விட 41 முதல் 80 நிமிடங்கள் அதிக ஓய்வு நேரம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Tags :
Advertisement