அதிர்ச்சி..! சென்னை IIT-யில் தேநீர் குடிக்க சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை...!
சென்னை ஐஐடி கேண்டினில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடி கேண்டினில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேண்டீன் பணியாளர் ஸ்ரீராம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் உ.பி., யைச் சேர்ந்த ஸ்ரீராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த திமுகவைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவன் ஆண் நண்பரை விரட்டி விட்டு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனில் எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், தற்பொழுது விசாரணையானது நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை ஐஐடியில் மாணவி ஒருவருக்கு பாலியல் சீண்டல் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.