ரூ.200 கடன் வாங்கிய மாணவன்..!! திருப்பிக் கேட்டு அரை நிர்வாணப்படுத்திய நண்பன்..!! கொடூர சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் தன்னுடன் படிக்கும் நண்பனிடம் ரூ.200 கடன் பெற்றுள்ளார். கடந்த திங்கட்கிழமை, அங்குள்ள ஒரு பூங்காவில் அந்த மாணவரும், அவரது நண்பரும் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் ஒரு காட்டுப் பகுதியில் ராணுவ வீரர்களின் பயிற்சியை பார்வையிடலாம் என கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், பின்னர் தான் தெரியவந்தது. அது நண்பரின் கூட்டாளிகள் என்பது. காட்டுப் பகுதியில் மேலும் இருவர் சேர்ந்து ரூ.200 கடன் பெற்ற மாணவரிடம் பணத்தை திருப்பித் தருமாறு கூறியுள்ளார். தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறியதால், அவர்கள் அனைவரும் அந்த மாணவரை அரை நிர்வாணப்படுத்தினர். மேலும், மது அருந்தச்சொல்லி, கம்புகளால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ததோடு போலீஸில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பி வந்த மாணவர், இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். மேலும், மாணவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர், இந்த சம்பவம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.