வேலை தேடும் இளைஞர்களா நீங்கள்? மாதம் ரூ.5000 உங்க அக்கவுண்டுக்கு வரப்போகுது..!! இத மட்டும் செய்ங்க..
தமிழ்நாட்டில் வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள போஸ்டில், வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களா நீங்கள்? தற்போது கல்லூரி முடித்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?
வேலை தேடும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 1 கோடி இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் கிடைக்கும் 12 மாத PM இன்டர்ன்ஷிப் வாய்ப்பு.. இதை பயன்படுத்த தவற வேண்டாம். இதற்காக மாதம் ரூ.5000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். இளைஞர்களின் ஆர்வத்தை பொறுத்து, எந்தத் துறையில் விரும்புகிறீர்களோ அந்த துறையில் 5 Internship வாய்ப்புகளை தேர்வு செய்யலாம்.
என்னென்ன தகுதிகள் :
* 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பாலிடெக்னிக், ITI, டிப்ளமா, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு.
* குடும்பத்தின் கடந்த ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
* மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் இணையதளத்தை பாருங்கள்:www.naanmudhalvan.tn.gov.in
தமிழ்நாட்டு மாணவர் ஒருவர், உலகின் எந்த நாட்டு மாணவரையும் விட, தரமும் தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதைக் காட்டும் திட்டம் தான் நான் முதல்வன், என்று தமிழ்நாடு அரசு இந்த திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 23 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 2200 நிறுவனங்கள், கல்வி அமைப்புகளில் இந்த மாணவர்கள் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். 250 படிப்புகளை இவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
அதேபோல் இந்த திட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகள் பங்குதாரர்களாக உள்ளன. இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனவுத்திட்டமான 'நான் முதல்வன்' திட்டம், லட்சோப லட்ச தமிழ்நாட்டு இளைஞர்களின் உயர்கல்விக்கும் - வேலைவாய்ப்புக்கும் கை கொடுத்து வருகிறது.
இத்திட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக, பொறியியல் மற்றும் கலை - அறிவியல் கல்லூரிகளின் நிர்வாகிகளுக்கான மாநில அளவிலான #நான்_முதல்வன் திட்டக் கருத்தரங்கினை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கி உள்ளோம்.
உயர்கல்வியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் சேர்க்கை - இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான Top-Ranking உயர்கல்வி நிறுவனங்கள் என உயர்கல்வியில் தமிழ்நாடு தொட்டு வரும் உயரங்களையும், அதனால் பெருகும் வேலைவாய்ப்புகளையும் விளக்கி உரையாற்றினோம். 'நான் முதல்வன்' திட்டம் மூலம் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய மற்றும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கல்லூரிகளுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்தினோம், என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Read more ; சர்ச்சை பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு.. செல்போன் ஸ்விட் ஆப்..!! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!