முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு...! அண்ணா நகர் 10 வயது சிறுமி வன்கொடுமை வழக்கு... அதிமுக வட்ட செயலாளர் கைது...!

A Special Investigation Team (SIT) has arrested Police Inspector Raji and AIADMK District Secretary Sudhakar in connection with the rape of a minor girl in Anna Nagar, Chennai.
05:28 AM Jan 08, 2025 IST | Vignesh
Advertisement

சென்னை அண்ணா நகரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ராஜி, அதிமுக வட்ட செயலாளர் சுதாகரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தனர்.

Advertisement

கடந்த ஆண்டு அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியின் தாயார் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

சென்னை உயர் நீதிமன்றமும் செப்டம்பர் 24ம் தேதி தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இவ்வழக்கு அக்டோபர் 1-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கை மத்திய புலனாய்வு துறை (CBI) விசாரணை செய்ய உத்தரவிட்டது. சென்னை காவல் துறை சார்பில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டு, தமிழக காவல் துறையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ராஜி, அதிமுக வட்ட செயலாளர் சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை வழக்கை ஒழுங்காக விசாரிக்காதது மற்றும் சிறுமியின் பெற்றோரை தாக்கிய புகாரில் என காவல் ஆய்வாளரும், வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆதரவாக இருந்ததாக அதிமுக வட்ட செயலாளரும் சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
anna nagarsitsupreme courttn governmentசென்னைதமிழ்நாடு
Advertisement
Next Article