அமைச்சர் மா.சு-க்கு எதிராக 2002 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு.. விடுதலை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்..!!
தமிழக சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு எதிரான 2002 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் விடுதலை அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், கடந்த 2002ம் ஆண்டு, அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. அப்போது திமுக உறுப்பினர்கள் தாக்கியதாக அதிமுக மன்ற உறுப்பினர்கள் சுகுமார் பாபு மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர் ரீட்டா ஆகியோர் பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சவுந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி ஆகிய 7 பேருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யபட்டது. இந்த வழக்கு சுமார் 22 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மா சுப்பிரமணியன் உட்பட 7 பேருக்கு வழக்கில் இருந்து விடுதலை அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Read more ; மின்சார பைக்கை களமிறக்கும் டாடா நிறுவனம்! அட்டகாசமான சிறப்பம்சங்கள்.. அதுவும் கம்மியான விலையில்..!!