அதிர்ச்சி..!! ரேஷன் கடைகளில் காலாவதியான பாமாயில் விற்பனை..? பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு..!!
நாடு முழுவதும் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ள பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றன. மேலும், மத்திய - மாநில அரசுகளின் நிவாரணம், நிதியுதவி உள்ளிட்டவைகளுக்கு ரேஷன் கார்டு பெரிதும் உதவுகிறது.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் பாமாயில் பாக்கெட்டுகளில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொருள்களின் தரத்தை உறுதி செய்ய அந்த தேதிகளை பார்த்து வாங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அரசு வழங்கும் பாமாயிலில் உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை குறிப்பிடாதது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காலாவதி தேதி இல்லாததால், ரேஷன் அட்டைதாரர்களும் பாமாயிலை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.