For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய ராணுவ வீரர்..!! கடைசியில் இப்படி சொல்லிட்டாரே..!! அடிதடியில் இறங்கிய பெண் வீட்டார்..!!

The police arrested and jailed a soldier who fell in love with a young woman near Usilampatti and got her pregnant and refused to marry him.
09:46 AM Jun 28, 2024 IST | Chella
இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய ராணுவ வீரர்     கடைசியில் இப்படி சொல்லிட்டாரே     அடிதடியில் இறங்கிய பெண் வீட்டார்
Advertisement

உசிலம்பட்டி அருகே இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது மகன் ராமன். இவர், இந்திய இராணுவத்தில் தற்போது பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அதே ஊரைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழகி திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர், வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அப்பெண்ணை மிரட்டி கருவில் இருந்த குழந்தையை கலைக்க வைத்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாகவும் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக இராணுவ வீரரான ராமனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி, உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக இராணுவ வீரர் இராமன் ஆஜரானார். விசாரணையில், தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராணுவ வீரர் இராமனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, இராமன் இளம்பெண் வீட்டினரை பார்த்து மிரட்டியதாக கூறி இருபிரிவினரும் காவல் நிலையம் முன்பே ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து ராணுவ வீரர் ராமனை மீட்டு நீதிமன்ற காவலுக்காக அழைத்துச் சென்றனர். காவல் நிலையம் முன்பே இளம்பெண் மற்றும் இராணுவ வீரரின் உறவினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More : இன்று கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..!! இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!!

Tags :
Advertisement