முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

75 வயது முதியவரை கடித்த பாம்பு... சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் செய்த செயல்...!

06:20 AM Nov 19, 2023 IST | 1newsnationuser2
Advertisement

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சியில் ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மூன்று மலை கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமங்களுக்கு போதிய சாலை வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

Advertisement

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டும். அலகட்டு கிராமத்தை சேர்ந்த சித்தபெலான் என்பவர் விவசாய நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக வயலில் இருந்த பாம்பு முதியவரை கடித்துள்ளது. மோகனா போக்குவரத்து மற்றும் சாலை வசதிகள் இல்லாததால் மக்கள் மூங்கிலில் போர்வையால் டோலி கட்டி முதியவரை அமர வைத்து உறவினர்கள் அவரை தூக்கிச் சென்றனர்.

மலை இறங்கிய பிறகு, அடிவாரத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். நீண்ட காலமாக தங்களது பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாத நிலையில் இது போன்ற சிரமங்களுக்கு உள்ளாவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர், உடனடியாக தங்களது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
dharmapuriRoad facilitysnake bite
Advertisement
Next Article