For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இதற்கென்றே தனி சேனலா..? கலாநிதி மாறனின் அடுத்த பிளான்..!! 24 மணி நேரமும் ஒளிபரப்பு..!!

02:43 PM May 13, 2024 IST | Chella
இதற்கென்றே தனி சேனலா    கலாநிதி மாறனின் அடுத்த பிளான்     24 மணி நேரமும் ஒளிபரப்பு
Advertisement
Advertisement

சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன், விரைவில் சன் ஹாலிவுட் என்கிற பெயரில் புது சேனல் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சின்னத்திரையில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்ந்து வருகிறது சன் டிவி. அதற்கு போட்டியாக ஏராளமான சேனல்கள் வந்தாலும், இன்றளவும் சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளன. சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் தொலைக்காட்சி மட்டுமின்றி பல்வேறு பிசினஸ்களையும் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக சன் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனமும் உள்ளது. அந்நிறுவனம் மூலம் பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக, கடந்தாண்டு கோலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஜெயிலர் திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரித்தது தான். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து அதிக வசூல் ஈட்டிய படமாக திகழ்ந்தது. விரைவில் ரிலீஸ் ஆக உள்ள தனுஷின் 50-வது படமான ராயனும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது தான். இப்படி படத்தயாரிப்பில் கோடி கோடியாய் சம்பாதித்து வரும் கலாநிதி மாறனுக்கு சொந்தமாக ஐபிஎல் அணியும் உள்ளது. டெக்கன் சார்ஜர்ஸ் ஆக இருந்த ஐதராபாத் அணியை கலாநிதி மாறன் வாங்கியதை அடுத்து அதற்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பல்வேறு இமாலய ஸ்கோர்களை அடித்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இப்படி பல்வேறு பிசினஸ்களில் கலக்கி வரும் கலாநிதி மாறன், விரைவில் மற்றொரு தொலைக்காட்சி ஒன்றை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு சன் ஹாலிவுட் என பெயரிட உள்ளதாகவும், அந்த சேனலில் 24 மணிநேரமும் ஹாலிவுட் படங்களை தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். விரைவில் சன் ஹாலிவுட் சேனல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.

Read More : ஒரு மாதத்திற்கு இதை மட்டும் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை டக்குன்னு குறையும்..!! டிரை பண்ணி பாருங்க..!!

Advertisement