மனைவிகளை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் வினோத கிராமம்! எங்க இருக்கு தெரியுமா?
ஆப்ரிக்காவின் தென் பகுதியில் நமீபியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பழங்குடியின மக்களிடம் ஒருவகையான சடங்கு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
நமீபியாவில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடின மக்கள் இருக்கிறார்கள். இன்று, இந்த பழங்குடியினர் 50,OOO பேர் உள்ளனர். ஆனால் இன்றும் இந்த பழங்குடியினருக்கு சில விதிகள் உள்ளன, அதை அறிந்த பிறகு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த பழங்குடியினரில் குளிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. அவர்களின் பழக்கவழக்கங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இருக்கின்றன. உலக முன்னேற்றம் அவர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இவர்களிடம் “Okujepisa omukazendu” என்ற விநோதமான பழக்கமும் இருக்கிறது. இதன்படி ஒருவர் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அந்த விருந்தினருக்கு அன்று இரவு அவர்கள் வீட்டில் தங்கினால் அப்பொழுது கணவன் தன் மனைவியை அந்த விருந்தினருக்கு "விருந்தாக்க" வேண்டுமாம். இதுதான் அந்த பழங்குடியின மக்களின் பழக்கமாம்.
இப்படியாக தன் மனைவி விருந்தினருடன் சந்தோஷமாக இருக்கும் போது கணவன் வேறு அறையில் தங்கி கொள்ள வேண்டும், வேறு அறை இல்லை என்றால் வீட்டிற்கு வெளியில் படுத்துக்கொள்ள வேண்டும் எக்காரணத்தை கொண்டும் உள்ளே வரக்கூடாதாம். ஒருவேளை விருந்தினர்கள் தம்பதியாக அதாவது கணவன் மனைவியாக வந்தால் இருவரும் பரஸ்பரம் விரும்பினால் மனைவியை அன்று ஒரு நாள் இரவுக்கு மட்டும் மனைவியை மாற்றிக்கொள்வார்களாம்.
இப்படியாக வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்குவது என்பது அந்த விருந்தினருடனான உறவை பலப்படுத்தும் என அம்மக்கள் நம்புகின்றனர். இதனால் அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருக்கும் என கருதுகின்றனர். இதே போல தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு செய்யும் மரியாதையாகவும் இதை கருதுகின்றனர்.
இப்படியாக மனைவியை விருந்தாக்குவது அல்லது வேறு ஒரு நபருடன் உடலுறவு கொள்வது அந்த மனைவிக்கு பிடிக்கவில்லை என்றால் அவரால் முடியாது என சொல்ல அனுமதியில்லை. கணவன் சொல்லிவிட்டால் கட்டாயம் செய்தே ஆகவேண்டும். இந்த கலாச்சாரம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Read more ; ‘மாட்டின் சிறுநீரில் குளித்து, சாணத்தை சன் ஸ்க்ரீமாக பயன்படுத்தும் மக்கள்!!’ எங்க இருக்காங்க தெரியுமா?