28 வயது இளைஞரின் உல்லாசத்தில் மயங்கிய கள்ளக்காதலி..!! கொஞ்சம் கூட யோசிக்காமல் கணவரை தீர்த்துக் கட்டிய 44 வயது மனைவி..!!
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் வாக்கிங் சென்ற கணவரை, 28 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை ஏவி 44 வயது மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசிகவுண்டம்புதூர் தாமரை கார்டனை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவர், பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி (44) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். ரமேஷ் கடந்த 1ஆம் தேதி அதிகாலை கோவை - சேலம் 6 வழிச்சாலையையொட்டி செல்லும் மங்கலம் சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த மர்ம கும்பல் ரமேஷை வழிமறித்து அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இதில், தொடர்புடைய கோபாலகிருஷ்ணன் (35), அஜீத் (27), சிம்போஸ் (23), சரண் (24), ஜெயபிரகாஷ் (45) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த கொலை சம்பவம் குறித்து அவிநாசி போலீஸ் டி.எஸ்.பி., சிவகுமார் கூறுகையில், “ரமேஷூக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ரமேஷின் வீடு இருக்கும் பகுதிக்கு அருகிலேயே சையது இர்பான் (28) என்பவர் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த கடைக்கு விஜயலட்சுமி அடிக்கடி சென்று வந்த நிலையில், விஜயலட்சுமிக்கும், இர்பானுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. விஜயலட்சுமியுடன் சையது இர்பானுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. கணவன் அன்பாக இல்லாததால் விஜயலட்சுமி இர்பானுடன் நெருங்கி பழகியுள்ளார்.
ரமேஷ் வெளியூர் சென்றிருந்த நேரங்களில் இர்பானை வீட்டிற்கு அழைத்து விஜயலட்சுமி உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் ரமேஷூக்கு தெரியவர மனைவியை கண்டித்து உள்ளார். ரமேசுக்கு, சில பெண்களுடன் தொடர்பு இருப்பது விஜலட்சுமிக்கு தெரிய வந்தது. மேலும், ரமேஷ் மது குடித்துவிட்டு மனைவிக்கு 'செக்ஸ்' டார்ச்சர் கொடுத்தும், அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் ரமேஷை கொலை செய்ய விஜயலட்சுமி திட்டுமிட்டு இர்பானிடம் தெரிவித்தார்.
அவர் தனது நண்பர் அரவிந்த் (எ) ஜானகி ராமன் (27) இருக்கிறார். அவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று இர்பான் கூறியுள்ளார். உடனே விஜயலட்சுமி வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளை எடுத்து இர்பானிடம் கொடுத்துள்ளார். அவர் அவிநாசியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.9.60 லட்சத்தை பெற்றுள்ளார். இதையடுத்து ஜானகிராமன் 5 பேர் கூலிப்படையை ஏற்பாடு செய்து உள்ளார். கடந்த டிச.1ஆம் தேதி அதிகாலை தொழிலதிபர் ரமேஷ் வீட்டில் இருந்து வாக்கிங் செல்ல புறப்பட்டுச் சென்ற தகவலை, விஜயலட்சுமி இர்பானிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, அங்கு தயாராக இருந்த கூலிப்படை கும்பல், அவரை சுற்றி வளைத்து படுகொலை செய்து அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ரமேஷின் மனைவி விஜயலட்சுமி, கள்ளக்காதலன் சையது இர்பான், கூலிப்படை ஏற்பாடு செய்து கொடுத்த ஜானகிராமன் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Read More : 6 மாதத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்..!! இயற்கை முறையில் குடல் முழுவதும் சுத்தமாகிவிடும்..!!