For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்ஸ்டாவில் பேசிய ஒரு மணி நேரத்தில் வாட்ஸ் அப்பில் வந்த நிர்வாண வீடியோ கால்..!! ரூ.2.50 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர்..!!

He lost Rs 2.50 lakh in an hour after chatting with a stranger on Instagram.
02:50 PM Aug 23, 2024 IST | Chella
இன்ஸ்டாவில் பேசிய ஒரு மணி நேரத்தில் வாட்ஸ் அப்பில் வந்த நிர்வாண வீடியோ கால்     ரூ 2 50 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர்
Advertisement

மும்பை பிரபாதேவி பகுதியைச் சேர்ந்த 26 வயது வங்கி ஊழியர், இன்ஸ்டாகிராமில் அறிமுகம் இல்லாத பெண்ணுடன் பேசிப் பழகத் தொடர்ந்து ஒரு மணிநேரத்தில் ரூ.2.50 லட்சம் பணத்தை இழந்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், வங்கி ஊழியரின் இன்ஸ்டாகிராம் செயலியில் முன்பின் ​​தெரியாத பெண்ணிடம் இருந்து நட்பு கோரிக்கை வந்துள்ளது.

Advertisement

பெண்கள் விஷயத்தில் வீக்கான இந்த இளைஞர், அந்த பெண்ணுடன் பேசத் தொடங்கியுள்ளார். சிறிது நேரத்திலேயே இருவரும் தங்கள் வாட்ஸ்அப் எண்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். நள்ளிரவு 1.15 மணியளவில், அவருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் வந்துள்ளது. அதில் ஒரு பெண் நிர்வாணமாக ஆபாசமான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், சிறிது நேரத்தில் வீடியோ கால் துண்டிக்கப்பட்டது.

5 நிமிடங்களுக்குப் பிறகு, வீடியோ காலின்போது ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ வங்கி ஊழியரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்துள்ளது. இதை அனுப்பிய பெண், “எனக்குப் பணம் அனுப்புங்கள். இல்லையென்றால், இந்த வீடியோ உங்கள் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கு பகிரப்படும்” என மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, பயந்துபோன அந்த இளைஞர், பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதோடு நிறுத்தாமல் திரும்பத் திரும்ப பணம் கேட்டு மிரட்டியதால் அரண்டுபோன அவர், மொத்தம் ரூ.2.5 லட்சம் அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனாலும், தொடர்ந்து டார்ச்சர் செய்து கொண்டிருந்ததால், காவல்துறையை அணுகி புகார் கொடுத்துள்ளார். இளைஞரின் புகாரை பெற்றுக்கொண்ட மும்பை தானே போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ”மக்களே இனி இந்த மாத்திரைகளை பயன்படுத்தாதீங்க”..!! பாராசிட்டமால் உள்ளிட்ட 156 மருந்துகளுக்கு தடை..!!

Tags :
Advertisement