பத்தாம் வகுப்பு போதும்.. 411 காலிப் பணியிடங்கள்.. மத்திய அரசில் வேலை இருக்கு..!!
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள 411 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு ஆகும். எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணியை இந்த எல்லைப்புற சாலைகள் அமைப்பு மேற்கொள்கிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி ஆர்.ஓவில் காலியாக உள்ள 411 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் :
சமையலர் (ஆண்) - 153, மேஸ்திரி - 172, இரும்பு கொல்லர் - 75, மெஸ் வெயிட்டர் - 11 என மொத்தம் 411 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி : அனைத்து பணியிடங்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எல்லைப்புற சாலைகள் அமைப்பு நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். மேஸ்திரி பணிக்கு 10 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கட்டிட கட்டுமானம் பிரிவில் தொழில்துறை பயிற்சிக்கான (Industrial Training) சான்றிதழ் உள்ளிட்டவை அவசியம்.
வயது வரம்பு : 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் அடிப்படையில், 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஓ பி.சி உள்ளிட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பதற்கு https://marvels.bro.gov.in/BROMarvels/CafeBRO என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க 24.02.2024 கடைசி நாளாகும்.
Read more : இதயம் ஆரோக்கியமாக உள்ளதா..? 35 வயது தாண்டிய அனைவரும்… கண்டிப்பாக செய்ய வேண்டிய பரிசோதனைகள்..!!