உருவாகிறது புதிய புயல்..!! எங்கெல்லாம் பாதிப்பு இருக்கும்..? இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!
மத்தியக் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் என்றும் தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும். அதேபோல், கட்ச் மற்றும் அதனை ஒட்டிய செளராஷ்ட்ரா பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை அரபிக்கடலை அடைந்து புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது.
கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரைப் பகுதியில் புயலாக வலுப்பெற்று, இரண்டு நாட்களில் இந்திய கடற்பரப்பை விட்டு நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடையும். கடந்த மே மாதம் வங்கக்கடலில் ரிமால் புயல் உருவான நிலையில், இந்தாண்டின் 2-வது புயலாக இது உருவாக உள்ளது. புயல் உருவானால் அதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த ASNA என பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று முதல் 4 நாட்கள் கனமழையும், நாளை மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கர்நாடக மாநிலத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இந்த 3 ராசிக்காரர்களும் ராஜயோகம்..!! 200 வருடங்களுக்கு பிறகு நடக்கப்போகும் மாற்றம்..!! இனி பண மழை தான்..!!