For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வங்கக் கடலில் மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! புயலாக மாறுமா..? இந்திய வானிலை மையம் பரபரப்பு தகவல்..!!

The Indian Meteorological Department has predicted that a new low pressure area is likely to form in the Bay of Bengal on October 22.
11:27 AM Oct 18, 2024 IST | Chella
வங்கக் கடலில் மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி     புயலாக மாறுமா    இந்திய வானிலை மையம் பரபரப்பு தகவல்
Advertisement

வங்கக் கடலில் வரும் அக்.22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”அக்டோபர் 20ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய மேலடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால், மத்திய வங்கக்கடலில் அக்.22ஆம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது.

பின்னர், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையால் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் முக்கிய பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், ”வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வலுவிழந்த நிலையிலேயே நீடிக்கும் வரை தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை. எனவே, அடுத்த வாரம் வடக்கு அந்தமான் அருகே இந்தோ - சீனாவிலிருந்து வரும் அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம். அது அந்தமான் கடலுக்குள் நுழையும்போது நமது சென்னைக்கு மேலே இருக்கும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறாத பட்சத்தில் அது தாழ்வான கிழக்குப் பகுதிகளால் தமிழ்நாட்டை நோக்கித் தள்ளப்படும். பெரும்பாலும் அது தீவிரமடைந்து மேலே செல்லும். நவம்பரில் தான் தமிழ்நாட்டிற்கு அதிக மழை வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன்பு தான், எங்கு பலத்த மழை பெய்யும் என்பதை நாம் அறிய முடியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி - நெல்லூர் இடையே நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை கரையைக் கடந்தது. இந்நிலையில், அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, சென்னையில் இன்று (அக்.18) பரவலாக காலை முதலே மழை பெய்து வருகிறது.

Read More : மனைவியை பிரிந்ததில் துளியும் விருப்பம் இல்லை..!! பிற்காலத்தில் புரிந்து கொள்வார்..!! ஓபனாக பேசிய யேசுதாஸ்..!!

Tags :
Advertisement