For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களே.. ZOHO -வில் வேலை வேண்டுமா? வந்தாச்சு புதிய அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க!!

A new job announcement has been made in a program called 'Marupadi' which provides training to women who have completed their degree in a leading IT company Joho and have taken a 'break' from working in a software company.
09:32 AM Jul 21, 2024 IST | Mari Thangam
பெண்களே   zoho  வில் வேலை வேண்டுமா  வந்தாச்சு புதிய அறிவிப்பு     மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. சென்னை, மதுரை, தென்காசி (மத்தளம்பாறை) உள்ளிட்ட பல இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஜோஹோ சார்பில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

Advertisement

தற்போது பெண்களுக்கான பிரத்யே பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஜோஹோ நிறுவனம் சார்பில் "மறுபடி" (MARUPADI) என்ற பெண்களுக்கான பிரத்யேக பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இந்த "மறுபடி" பயிற்சி என்பது சாப்ட்வேர் துறையில் பணியாற்றி ஏதாவது ஒரு காரணத்தினால் வேலையை கைவிட்ட பெண்களுக்கு மீண்டும் ஐடி துறையில் பணியமர்த்தும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது. இதனால் ஐடி துறையில் பணியாற்றி ஓய்வில் இருப்பவர்கள் மீண்டும் பணி செய்ய விரும்பினால் இதில் பங்கேற்கலாம்.

தகுதி ;

இந்த பயிற்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு என்று சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பெண்கள் ஏதாவது ஒரு டிகிரி முடித்து சாப்ட்வேர் கம்பெனியில் 2 ஆண்டு Technological ரோலில் பணியாற்றிய அனுபவம் கொண்டு தற்போது வேலையின்றி இருக்க வேண்டும். எந்த வயது கொண்ட பெண்கள் வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்யலாம். இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு பயிற்சி காலத்தில் மொத்தம் 3 வகையான கோர்ஸ்களில் ஏதேனும் ஒன்றை நாம் தேர்வு செய்து கற்று கொள்ளலாம்.

இதில் முதலாவது கோர்ஸ் பெயர் டெக்னிக்கல் ரைட்டிங் (Technical Writing). இதில் டெக்னிக்கல் ரைட்டிங்கின் ஃபண்டமென்டல்ஸ், டெக்னிக்கல் ரைட்டிங் அடிப்படையில் டீம் டைவ்ஸ் (Deep Dives), SEO Basics, Marketing Techniques உள்ளிட்டவை தொடர்பான பயிற்சி வழங்கப்படும்.

2வது என்னவென்றால் சாப்ட்வேர் டெஸ்ட்டிங் (Software Testing). இதில் Practical, Real time apporaches பயன்படுத்தி டெஸ்ட்டிங் ஃபண்டமென்டல்ஸ், வெப் மற்றும் மொபைல் டெஸ்ட்டிங் கற்று கொடுக்கப்படும். இதில் செக்யூரிட்டி, நெட்வொர்க், Compatibility, API டெஸ்ட்டிங்கும் அடங்கும். அதேவேளையில் ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் பிரிவை எடுத்து கொண்டால் ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட மற்றும் செலினியம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும்.

தற்போது டெக்னிக்கல் ரைட்டிங் மற்றும் சாப்ட்வேர் டெஸ்ட்டிங் ஆகிய பிரிவில் மட்டுமே பணி குறித்த அறிவிப்பு இருந்தாலும் கூட கூடுதலாக 3வது சாப்ட்வேர் டெவலப்மென்ட் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இதில் Stack Of Technologies என அழைக்கப்படும் ஜாவா, DataStructures, SQL மற்றும் ப்ரண்ட் என்ட் டெவலமென்ட்டின் அடிப்படைகள் (Basics of Front End Development) பற்றிய பயிற்சி அளிக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். ஜுலை 30ம் தேதி பயிற்சிக்கான தேர்வு என்பது இருக்கும் என்பதால் அதற்கு முன்பாக www.zohoschools.com எனும் இணையதளம் சென்று ஆன்லைனில் (ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் லிங்க் செய்தியின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது) விண்ணப்பம் செய்வது சிறந்ததாக இருக்கும்.

விண்ணப்பம் செய்வோருக்கு நுழைவு தேர்வு (Entrance Exam) இருக்கும். அதில் பாஸ் ஆக வேண்டும். அதன்பிறகு ஒரு இண்டர்வியூ இருக்கும். அதிலும் தேர்வானால் மட்டுமே "மறுபடி" பயிற்சியில் சேர முடியும். இதற்கான நுழைவு தேர்வு, இன்டர்வியூ எப்படி இருக்கும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முடிந்தவரை அதற்கேற்ப தயாராகி செல்வது நல்லது.

மேலும் பயிற்சியில் சேருவதற்கான நுழைவு தேர்வு, இண்டர்வியூவில் பங்கேற்கும்போது லேப்டாப்/ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும். இணையதள சேவையில் குறைபாடு இருக்க கூடாது. இண்டர்வியூவில் செலக்ட் ஆன டிரெய்னிங் வழங்கப்படும். இந்த டிரெய்னிங்கிற்கு ஒவ்வொருவரும் தங்களின் சொந்த லேப்டாப்பை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதன்பிறகு இந்த Course என்பது 3 மாதம் நடக்கும். இது ஆன்லைனில் நடக்காது. சென்னை அலுவலகத்தில் நேரடியாக சென்று Course அட்டென் செய்ய வேண்டி இருக்கும். மேலும் சென்னையில் இந்த டிரெய்னி காலத்தில் 3 மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் Stipend ஆக வழங்கப்பட வாய்ப்புள்ளது.

Read more ; ஐபிஎல் 2025!. டு பிளெசிஸ் அவுட்!. கே.எல்.ராகுல் இன்!. பெங்களூரு அணியின் கேப்டனாக நியமனம்?.

Tags :
Advertisement