முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விமான பயணிகளுக்கு புதிய வசதி!… இனி காத்திருக்க தேவையில்லை!… வழிகாட்டுதல்கள் இதோ!

08:21 AM Apr 02, 2024 IST | Kokila
Advertisement

Guidelines: விமானம் புறப்படுவதில் நீண்ட நேர தாமதம் ஏற்பட்டால், பயணிகள் விமானத்திலேயே காத்திருக்காமல், புறப்பாடு வாயில் வழியாக வெளியேற அனுமதி வழங்கும் புதிய வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் தினசரி 3,500 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் பல்வேறு காரணங்களால் சில சமயம் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி 17ம் தேதி பனிமூட்டம் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதில் 12 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால், பயணிகள் விமான ஓடுபாதையிலேயே அமர்ந்து உணவு உண்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக விமான நிறுவனத்திற்கும், மும்பை விமான நிலைய பராமரிப்பு நிறுவனத்திற்கு ரூ.1.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, நீண்ட நேர தாமதம் ஏற்படும் போது விமானத்திலேயே பயணிகள் தங்கியிருக்காமல், புறப்பாடு வாயில் வழியாக வெளியேற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் (பிசிஏஎஸ்) கடந்த 30ம் தேதி வெளியிட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் டைரக்டர் ஜெனரல் சுல்பிகர் ஹசன் கூறி உள்ளார்.

Readmore: RIP | ஜென்டில்மேன், சந்திரமுகி உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய ஸ்ரீ பாலகிருஷ்ணா காலமானார்..!!

Tags :
guidelinesஇனி காத்திருக்க தேவையில்லைவிமான பயணிகளுக்கு புதிய வசதி
Advertisement
Next Article