ஜூன் 3ஆம் தேதி வானில் நிகழும் அதிசயம்..!! வெறும் கண்களில் பார்க்கலாம்..!!
6 கோள்கள் ஒரே நோ்க்கோட்டில் வரும் அதிசய நிகழ்வு ஜூன் 3ஆம் தேதி நிகழ்கிறது. இதனை நாம் வெறும் கண்களால் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில், வெவ்வேறு வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறு சுற்றி வரும் கிரகங்களை நாம் பூமியில் இருந்து சில சமயங்களில் ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு மிகவும் அரிதாக அமைகிறது.
பொதுவாக 3 அல்லது 4 கோள்களை ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு நிகழ்கிறது. இந்நிலையில், ஜூன் 3ஆம் தேதி கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நோ்க்கோட்டில் வர உள்ளன. இதில் புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களை நாம் வெறும் கண்ணால் பாா்க்கலாம். யுரேனஸ் மற்றும் நெப்டியூனானது பூமியைவிட்டு தொலைவில் இருப்பதால் அதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது. தொலைநோக்கியின் உதவியுடன் பாா்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Read More : பெற்றோர்களே உஷார்..!! உங்கள் குழந்தைக்கு இந்த அறிகுறி இருக்கா..? உடனே மருத்துவமனைக்கு போங்க..!!