முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வானில் நிகழும் அதிசயம்..!! ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள்..!! எப்போது பார்க்க முடியும்..? விஞ்ஞானிகள் தகவல்..!!

09:00 AM May 17, 2024 IST | Chella
Advertisement

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் நேர் கோட்டில் அமைவது என்பது மிகவும் அரிதான ஒன்று. அப்படியான சம்பவம் விரைவில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Advertisement

விண்வெளி நாம் நினைப்பதை விட பெரியது. நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது. மனிதர்கள் தோன்றிய காலம் தொடங்கி தற்போது வரை விண்வெளியை புரிந்து கொள்ள முயன்று வருகின்றனர். ஆனால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இன்னும் விண்வெளியை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. சோவியத் ரஷ்யா காலத்தில் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டனர். அது உலகம் முழுவதும் உள்ள சாமானிய மக்களுக்கும் விண்வெளி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் சாதாரண மக்கள் கூட விண்வெளியை உற்று கவனிக்க ஆரம்பித்துள்ளனர். இவர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக விண்வெளியில் முக்கிய மாற்றம் ஒன்று நிகழ இருக்கிறது.

அதாவது, நம்முடைய சூரிய குடும்பத்தில் இருக்கும் 6 கோள்கள் விரைவில் நேர்க்கோட்டில் வர இருக்கின்றன. இதில் 4 கோள்கள் வரை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இப்படி கோள்கள் நேர் கோட்டில் வருவது மிக அரிதான விஷயம். இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "நமது சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் இருக்கின்றன. இதில் 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் தெரிய இருக்கிறது. இப்படி நிகழ்வது அபூர்வமான ஒன்றுதான். இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும். புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்கள் நேர்க்கோட்டில் வரும்.

இந்த நிகழ்வு ஏறத்தாழ அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கிவிடும். இருப்பினும் மிகச்சரியாக இவை அனைத்தையும் பார்க்க வேண்டுமெனில், ஜூன் 3ஆம் தேதிதான் பொருத்தமான நாள். இந்நாளில், 6 கோள்களில் புதன், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். மீதமுள்ள 2 கோள்கைளை தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம். ஜூன் 3ஆம் தேதி சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இதனைப் பார்க்கலாம். பூங்கா, கடற்கரை போன்ற பகுதிகளில் இருந்து இதனை பார்க்க முடியும். இருப்பினும் ஒளிமாசு குறைந்த இடத்தில் இருந்து பார்த்தால் தெளிவாக பார்க்க முடியும்" என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Read More : ’இனி 5 சர்வீஸ் இருந்தாலும் ஒன்றுக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம்’..!! தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி..!!

Advertisement
Next Article