முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தேனி: கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டவர் படுகொலை.! கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் செய்த துணிகர சம்பவம்.!

02:37 PM Feb 20, 2024 IST | 1newsnationuser4
Advertisement

தேனி அருகே, கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபரை ஒரு பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே தேவதானப்பட்டியில் மன்மதன் என்பவர் ஜோதிடம் பார்ப்பது, மாட்டு தீவனம் விற்பனை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகி, மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தேவதானப்பட்டியில் இயங்கி வரும், எல்ஐசி நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்று வந்த ஜெய தீபா (40), மன்மதனிடமிருந்து 30 ஆயிரம் ரூபாயை கடனாகப் பெற்றார். அந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில் மன்மதன் ஜெயதீபாவை, கொடுத்த கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயதீபா, தனது கள்ள காதலன் முத்துமணி என்பவருடன் சேர்ந்து, மன்மதனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி மன்மதன் வீட்டில் தனது தனியாக இருந்த நேரத்தில் சென்று, கத்தியால் குத்தி அவரை கொலை செய்துள்ளனர். அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியையும் திருடியதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மன்மதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதில், ஜெயதீபா மற்றும் முத்துமணி இருவரும், மன்மதனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

English summary: A man was killed by a woman and her lover for asking to repay the debt. The murderers have been arrested and subjected to interrogation.

Read More:

Tags :
crimedebtlovermurderpolice arrest
Advertisement
Next Article