முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தனது கிராமத்திற்காக மலையையே குடைந்த கூலி தொழிலாளி!! என்ன காரணம் தெரியுமா?

A laborer who dug a mountain for his village!! Do you know what the reason is?
04:43 PM Jul 20, 2024 IST | Mari Thangam
Advertisement

உத்தராகண்ட் மாநிலம் க்வார் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க தனி ஒருவனாக மலையைக் குடைந்து சாலை அமைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் கிவார் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் கோசுவாமி. கூலி தொழிலாளியான இவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க 500 மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து சாலை அமைத்துள்ளார். சுத்தியல் மற்றும் உளியின் உதவியுடன் 9 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலையில், தற்போது 4 சக்கர வாகனங்கள் பயணிக்க முடியும். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் அமைத்த சாலை பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. எனினும் இன்னும் அகலப்படுத்த வேண்டி உள்ளது. இப்போது, இந்த சாலையில் 4 சக்கர வாகனங்கள் பயணிக்க முடியும். இதனால் 300 பேர் பயனடைவார்கள். இந்த சாலையை அமைக்க அரசோ, கிராம மக்களோ யாரும் உதவவில்லை. மாறாக என்னை ஏளனம் செய்தார்கள்” என்றார்.

கூலி வேலை செய்து வரும் கோஸ்வாமி தினமும் ரூ.600 சம்பாதிக்கிறார். வேலைக்கு செல்லும் முன்பு காலை 5 மணி முதல் 9 மணி வரை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உத்தராகண்டில் இதுபோல சாலை வசதி இல்லாத சுமார் 84 கிராமங்கள் உள்ளன. சில கிராம மக்கள் முக்கிய சாலையை அடைய 10 கி.மீ. வரை நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனிடையே, பாகேஷ்வர் மாவட்டத்தின் கன்டா பகுதி மக்கள் சாலை அமைத்துத் தரும்படி கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து 10 பெண்கள் கூட்டாக சேர்ந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; உஷார்..!! தமிழில் பெயர் பலகை..!! இனி கட்டாயம் அபராதம் தான்..!! எவ்வளவு தெரியுமா..?

Tags :
Priest informationUttarakhand
Advertisement
Next Article