’ஏ.ஐ. தொழில்நுட்பம் 21ஆம் நூற்றாண்டை அழித்துவிடும்’..!! பிரதமர் மோடி எச்சரிக்கை..!!
ஏ.ஐ. தொழில்நுட்பம் 21ஆம் நூற்றாண்டை அழித்து விடும் அபாயம் உள்ளதாக பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் உலகளாவிய கூட்டமைப்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்த அபாயத்தை அவர் எடுத்துரைத்தார். அப்போது, "பயங்கரவாதிகளின் கைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சென்று சேரும் பட்சத்தில் உலகளவில் அச்சுறுத்தலாக மாறிவிடும். எனவே, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் நெறிமுறை பயன்பாட்டிற்கான உலகளாவிய கட்டமைப்பு தேவை.
ஏ.ஐ தொழில் நுட்பத்தை 21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான மிகப்பெரிய கருவியாக மாற்ற முடியும். அதே சமயம் 21ஆம் நூற்றாண்டை அழிப்பதிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஒரு சக்தியாகவும் இருக்கும். டீப் ஃபேக், சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு திருட்டு போன்ற சவால்களைத் தவிர, ஏ.ஐ தொழில்நுட்பம் பயங்கரவாதிகளின் கைகளில் சென்று கிடைத்து விடக்கூடாது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.