அவன் கூட உனக்கு என்ன பழக்கம்..? மனைவியை காரோடு எரித்துக் கொன்ற கணவர்..!! கேரளாவில் பயங்கரம்
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த மனைவியை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பத்மராஜன் (60). இவரது மனைவி அனிலா (40). கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிலா அவரது நண்பர் ஹனீஸ் என்பவருடன் சேர்ந்து பேக்கரி கடை தொடங்கினார். இது பத்மராஜனுக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக மனைவி அனிலாவுடன் பல முறை சண்டை போட்டுள்ளார். அதனை கண்டுகொள்ளாமல் ஹனீஸ் உடன் சேர்ந்து பேக்கரி கடை நடந்தி வந்ததால் இருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சந்தேகித்தான்.
ஒரு கட்டத்தில் தனது மனைவியுடன் பழக கூடாது என ஹனீஸ் உடன் பத்மராஜன் தகராறு செய்தார். அப்போது, தான் முதலீடு செய்துள்ள பணத்தை கொடுத்தால் விலகி விடுவதாக ஹனீஸ் கூறியுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காத பத்ம நாதன் மனைவியையும், ஹனீஸையும் தீர்த்துக்கட்ட தீர்மானித்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு அனிலாவும், ஹனீஸும் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். செம்மான்முக்கு என்ற பகுதியில் வந்தபோது, பெட்ரோல் கேனுடன் தனது காரில் பத்மராஜன் காத்திருந்தார். கார் வந்ததும் ஓடி சென்று வழிமறித்து, தயாராக வைத்திருந்த பெட்ரோலை காரில் ஊற்றி லைட்டரால் தீ வைத்தார். இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அங்கிருந்து பத்மராஜன் தப்பி ஓடினார்.
நடுரோட்டில் காரில் தீ பிடிப்பதை பார்த்ததும் அப்பகுதியினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். காரில் இருந்த அனிலா உடல் கருகி பரிதாபமாக இறந்தார். அவருடன் இருந்த பேக்கரி கடை ஊழியர் சோனி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான் காரில் இருந்து ஹனீஸ் அல்ல என்பது பத்மராஜனுக்கு தெரியவந்தது. இதையடுத்து கொல்லம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பத்மராஜன் சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் வெளியிட்ட அறிவிப்பு..!!