சற்றுமுன்...! கனமழை காரணமாக மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...!
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமனையானது பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. திருவாரூர், நாகை மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு 940 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது.
இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.