அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்...! குறை தீர்க்கும் அமைப்பை உருவாக்கிய மத்திய அரசு...!
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான குறை தீர்க்கும் அமைப்பு மத்திய அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர்களுக்காக இந்திய உணவுக் கழகத்தின் குறை தீர்க்கும் அமைப்பின் கைபேசி செயலியை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை, அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார். வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, சம்பந்தப்பட்ட தரப்பினரின் திருப்தி ஆகியவற்றுக்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த கைபேசி செயலி அரிசி ஆலை உரிமையாளர்கள் இந்திய உணவுக் கழகத்திடம் தங்கள் குறைகளை வெளிப்படையாக எடுத்துரைத்து, தீர்வைக் காண உதவும்.
இந்த செயலி, நல்ல நிர்வாகத்திற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்த செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் புகார்களை பதிவு செய்து அதன் நிலையைக் கண்காணிக்க முடியும்.
செயலியின் முக்கிய அம்சங்கள்;
ஆலை உரிமையாளர்கள் தங்கள் குறைகளை எளிதாக தங்கள் மொபைலிலேயே பதிவு செய்யலாம். இது எஃப்.சி.ஐ உடனான தகவல்தொடர்புகளை எளிதாக்குகிறது. இந்த செயலி செய்யப்பட்டுள்ள புகார் நிலை குறித்து அவ்வப்போது புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குகிறது. ஆலை உரிமையாளர்களுக்கு தகவல் அளித்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. மேம்படுத்தப்பட்ட சேவைத் தரத்துடன் கொள்முதல் நடவடிக்கைகளை எளிதாக்குவதில் இந்திய உணவுக் கழகத்தின் உறுதிப்பாட்டில் இது மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது.