ABC ஜுஸ் கேள்விப்பட்டிருப்போம், பெண்களுக்கு அருமருந்தாக விளங்கும் PBC ஜுஸ் கேள்விப்பட்டு இருக்கீங்களா.?
பெண்களுக்கு ஏற்படும் பிசிஓஎஸ் பிரச்சனை ரத்த சோகை ஆகியவற்றை போக்கவும் முகத்திற்கு புதுப்பொலிவையும் பளபளப்பையும் தரக்கூடிய ஒரு அற்புதமான ஜூஸ் ரெசிபியை பார்ப்போம். இந்த ஜூஸ் பிபிசி ஜூஸ் என அழைக்கப்படுகிறது.
இந்த ஜூஸ் பிபிசி என அழைக்கப்படுவதற்கு காரணம் இதில் பயன்படுத்தப்படும் பைனாப்பிள் கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவையாகும். இந்த ஜூஸ் செய்வதற்கு முதலில் 1/4 அன்னாசி பழம் 5 கேரட் 1 பீட்ரூட் மற்றும் சிறிது துண்டு இஞ்சி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் தோல் நீக்கி நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக ஜூஸ் செய்து கொள்ளவும். இதில் இருக்கும் அனைத்து காய்கறிகளும் நன்றாக பிளெண்டான பின்னர் நன்றாக வடிகட்டி இவற்றை குடிக்கலாம். இந்த ஜூஸ் குடிப்பதால் முகம் பளபளப்படையும். மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பிசிஓஎஸ் பிரச்சனை நீங்குவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஜூஸில் இருக்கும் இரும்புச்சத்து காரணமாக இரத்த சோகை குணமாகவும் இந்த ஜூஸ் உதவி புரிகிறது.