சோகம்...! தமிழகத்தில் நிமோனியா காய்ச்சலுக்கு சிறுமி பலி..! முக்கிய அறிகுறிகள் என்ன...?
திருவள்ளூர் மாவட்டத்தில் நிமோனியா காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் தொழுவூர் குப்பம் தமிழ்நாடு காவல்துறை தலைமை காவலர் செழியன் அவர்களின் இளைய மகள் நிமோனியா காய்ச்சல் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். நிமோனியா காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் தொழுவூர் பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிமோனியா என்றால் என்ன..? & அதன் முக்கிய அறிகுறிகள்
பூஞ்சை அல்லது பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் இது ப்ளூரிசி என்றும் அழைக்கப்படுகிறது. நிமோனியா சுவாச நோயாகவும் அறியப்படுகிறது. குழந்தைகளாக இருந்தாலும், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் நிமோனியாவால் பாதிக்கப்படக் கூடும்.
சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மேலோட்டமான சுவாசம், இதயதுடிப்பு அதிகரித்தல், காய்ச்சல், குளிச்சி மற்றும் அதிக வியர்வை, இருமல், நெஞ்சுவலி, குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.