முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

6 பேரை அரிவாளால் வெட்டிய கஞ்சா போதை கும்பல்..!! 3 பேர் கவலைக்கிடம்..!! திருவள்ளூரில் பயங்கர சம்பவம்..!!

The incident of 6 people being hacked to death by a gang of ganja addicts has caused a stir in Thiruvallur.
08:14 AM Jan 13, 2025 IST | Chella
Advertisement

கஞ்சா போதை கும்பலால் 6 பேர் வெட்டப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி. இளைஞரான இவர், கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், இவர், அங்குள்ள கடைக்குச் சென்றபோது, அங்கிருந்த ஐந்து பேர் கொண்ட கஞ்சா கும்பல் ஹரியை, மிரட்டி செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டுள்ளனர். இதை ஹரி தட்டிக் கேட்டபோது, அந்த கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த ஹரியின் உறவினர்களும் அங்கு சென்றனர். அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த கும்பல் உறவினர்களான ரவி, வெங்கடேசன், கஸ்தூரி அய்யா, பாலாஜி, வெங்கடேசன் என 5 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு விழுந்தது.

இதையடுத்து, ஹரி உள்பட 6 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெட்டுப்பட்ட 6 பேரில் 3 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கஞ்சா போதை கும்பலால் 6 பேர் வெட்டப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : இன்று போகிப் பண்டிகை..!! ’காப்புக் கட்டு’ பற்றி தெரியுமா..? இது வெறும் சடங்கல்ல..!! தமிழனின் மருத்துவ அறிவு..!!

Tags :
6 பேருக்கு அரிவாள் வெட்டுகஞ்சா போதை கும்பல்திருவள்ளூர் மாவட்டம்
Advertisement
Next Article