தமிழ்நாட்டில் மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!! நாளை இந்த 3 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை பொங்கல் தினத்தன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. நேற்று முன் தினம் நெல்லை மற்றும் தென் மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று மதியம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை பொங்கல் தினத்தன்று நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த இரு தினங்களுக்க்ஹு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.