முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரபல கேங்ஸ்டரால் எனது உயிருக்கு ஆபத்து..!! ஏற்கனவே 2 முறை குடும்பத்துடன் கொல்ல சதி..!! சல்மான் கான் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Actor Salman Khan has given a shocking confession to the police that the Lawrence Bishnoi gang planned to kill him and his family.
03:29 PM Jul 25, 2024 IST | Chella
Advertisement

தன்னையும், தன் குடும்பத்தினரையும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸாரிடம் நடிகர் சல்மான் கான் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement

மும்பை பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே, கடந்த ஏப்ரல் மாதம் 2 இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பின்ன,ர் இருசக்கர வாகனத்தில் அவர்கள் தப்பியோடிவிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக விக்கி குப்தா (24), சாகர் பால் (21) ஆகிய இருவரையும் மும்பை காவல்துறை கைது செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சல்மான் கானிடம் மும்பை போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அதில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் இருவரும் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஒரு பேஸ்புக் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், தானும் தன்னுடைய குடும்பத்தினரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், தங்களை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் திட்டமிட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சில முறை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் நடிகர் சல்மான் கானுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : நீங்களும் பிரதமரின் இலவச வீடு திட்டத்தில் பயன்பெற வேண்டுமா..? என்ன தகுதி..? என்ன ஆவணங்கள் தேவை..?

Tags :
இளைஞர்கள்காவல்துறைதுப்பாக்கிச் சூடுநடிகர் சல்மான் கான்மும்பை
Advertisement
Next Article