For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! 'AI மூலம் பாலியல் பொம்மை' விரைவில் அறிமுகம் செய்யும் சீனா!!

A famous Chinese company is developing AI-powered sex toys.
06:16 PM Jun 23, 2024 IST | Mari Thangam
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க    ai மூலம் பாலியல் பொம்மை  விரைவில் அறிமுகம் செய்யும் சீனா
Advertisement

சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ஏஐ உடன் கூடிய பாலியல் பொம்மைகளை உருவாக்கி வருகிறது.

Advertisement

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் பல புதுப்புது வளர்ச்சிகளைச் சந்தித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை கொண்டிருந்தாலும், ஏஐ தொழில்நுட்பம், மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தை கொண்டுள்ளது.

இந்த ஏஐ தொழில்நுட்பம் உலகின் உள்ள அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாகியுள்ளது. இப்போது நீங்கள் கனவிலும் எதிர்பார்க்காத விஷத்தில் கூட ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அது தான் செக்ஸ் டால் எனப்படும் பாலியல் பொம்மைகள். அவ்வகையில் செக்ஸ் பொம்மைகள் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த சீன விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த பாலியல் பொம்மைகளால் மனிதர்களுடன் நெருக்கமாக இருப்பது மட்டுமின்றி, அவர்களுடன் உரையாற்றவும் முடியுமாம். இதன் மூலம் மனிதர்களுக்கு அப்படியே ஒரு நபருடன் இருக்கும் ஒரு உணர்வு ஏற்படுமாம். சாட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பத்தை இந்த செக்ஸ் பொம்மைகளில் அவர்கள் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் யூசர்களால் மனிதர்களைப் போலவே இந்த பாலியல் பொம்மைகளுடன் பேசவும் கூட முடியும்.

இதற்காக செக்ஸ் பொம்மைகளை அதிகம் உற்பத்தி செய்யும் ஸ்டார்பெரி டெக்னாலஜி என்ற நிறுவனம் சாட் ஜிபிடியை போலச் சொந்தமாக ஒரு மாடலை உருவாக்கி வருகிறார்கள். ஏஐ வசதியுடன் கூடிய இந்த இந்த செக்ஸ் பொம்மைகள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று ஸ்டார்பெரி நிறுவனம் அறிவித்துள்ளது.

Read more ; ‘அழகற்ற நாய் என்ற பட்டத்துக்கு 5 முறை போராட்டம்’ இறுதியில் மகுடம் சூடிய வைல்ட் தாங்!!

Tags :
Advertisement