முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடக்கும் அதிரடி மாற்றம்’..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்..!!

01:51 PM Dec 16, 2023 IST | 1newsnationuser6
Advertisement

2024ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மூட்பித்ரியில் ராணி அப்பாக்காவின் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கு முக்கியம் என்பதை பிரதமர் மோடி எப்போதும் நம்புவதால், மகளிர் மசோதா நிறைவேறியது என்றார்.

போர்த்துகீசியர்களுக்கு எதிராக போராடிய 16ஆம் நூற்றாண்டின் உல்லாலின் ராணி, ராணி அப்பாக்காவின் தைரியத்தையும், வீரத்தையும் பாராட்டிய சீதாராமன் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக போராடிய பல அறியப்படாத போராளிகளின் பங்களிப்பை ஆவணப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக, அரசாங்கம் 14,500 கதைகள் கொண்ட டிஜிட்டல் மாவட்ட களஞ்சியத்தை தொகுத்துள்ளது. இது சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களை சிறப்பித்துக் காட்டுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு, அரசியல் நிர்ணய சபையில் பெண்கள், மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பழங்குடியினத் தலைவர்கள் ஆகிய 3 புத்தகங்களை வெளியிட அமர் சித்ர கதாவுடன் மத்திய கலாச்சார அமைச்சகம் இணைந்துள்ளது என்றார்.

Tags :
நிர்மலா சீதாராமன்பெண்கள் இட ஒதுக்கீடுமக்கள் தொகை கணக்கெடுப்புமத்திய அரசு
Advertisement
Next Article