முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உயிரை கொல்லும் ரேபிஸ் வைரஸ்!… நாய் நக்கினால் அலட்சியம் வேண்டாம்!… ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

07:34 PM Nov 26, 2023 IST | 1newsnationuser3
Advertisement

ரேபிஸ் வைரஸ் எச்சில் மூலம் பரவும் என்பதால் நாய் நக்கினால் கூட தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

மனிதர்கள் இன்னும் மருந்து கண்டுபிடிக்காத சில நோய்களில் ரேபிஸ் நோயும் ஒன்று. இது வந்துவிட்டால் நிச்சயம் குணப்படுத்த முடியாது. ஆனால் தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம் ரேபிஸிலிருந்து தப்பிக்க முடியும். இருப்பினும் இது குறித்த விழிப்புணர்வு பலருக்கும் இல்லை என்பதால் நாய் கடித்தாலும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இப்படி இருக்கையில்தான் திருவொற்றியூர் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அதாவது ஒரே நாளில் பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை ரேபிஸ் பாதித்த நாய் கடித்திருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் ரேபிஸ் அச்சத்தை தலைதூக்கியிருக்கிறது. ரேபிஸ் நாய்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளலாம். அது யாருக்கும் கட்டுப்படாது. சோறு போட்டவர்கள் கூப்பிட்டால் கூட கண்டுக்கொள்ளாது. அதேபோல அதன் கீழ் தாடைகள் எப்போதும் தொங்கிக்கொண்டே இருக்கும். அதிலிருந்து எச்சில் ஒழுகியபடி இருக்கும். மட்டுமல்லாது யாரை பார்த்தாலும் துரத்தி துரத்தி கடிக்கும். சாதாரண நாய்கள் இப்படி கடிக்காது.

ரேபிஸ் வைரஸ், நாயை தாக்கிவிட்டால் அது, நாயிக்கு மூளை அழற்ச்சியை ஏற்படுத்தி, நரம்பு மண்டலத்தை முழுவதுமாக தனது கண்ட்ரோலில் எடுத்துக்கொள்ளும். இப்படி வைரஸ் தாக்கப்பட்ட நாய் 10 நாளில் இறந்துவிடும். எனவே இந்த வைரஸ் மற்றொரு உடலில் புகுவதற்காக நாயை உசுப்பேற்றி கடிக்க வைக்கும். இவ்வாறு கடிப்பதன் மூலம் மனிதர்கள் அல்லது மற்ற நாய்களின் உடலில் வைரஸ் புகுந்துவிடும்.

பின்னர் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழந்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் மற்றொரு உடலை கடித்து வைத்துவிட்டுதான் போவார்கள். இதுதான் ரேபிஸ் நோய் பரவும் முறை. எனவே தெரு நாய் கடித்தவுடன் தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், ரேபிஸ் வைரஸ் பாதித்த நாய் நக்கினாலே நாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். ரேபிஸ் வைரஸ் எச்சில் மூலம் பரவும் என்பதால் நாயின் எச்சில், மனிதர்களின் ஆறாத காயங்கள் மீது படும்போது அது பரவுகிறது.

எனவே நாய் நக்கினால் கூட தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள், அந்த நாய்க்கு ரேபிஸ் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதை பரிசோதியுங்கள் என்று எச்சரித்துள்ள ராதாகிருஷ்ணன், அதே சமயம் ரேபிஸ் குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் எனவும் கூறியுள்ளார். திருவொற்றியூர் சம்பவத்தையடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. சென்னையில் இந்த ஒரு மாதத்தில் இதுவரை 1,427 தெரு நாய்களை பிடித்து, அதில் 1,182 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

Tags :
rabies virusநாய் நக்கினால் அலட்சியம் வேண்டாம்ராதாகிருஷ்ணன் எச்சரிக்கைரேபிஸ் வைரஸ்
Advertisement
Next Article