1 ரூபாய் கொடுத்தால் 500 ரூபாயை அள்ளிக் கொடுக்கும் நாடு!! எங்கே தெரியுமா?
இந்தியா 1 ரூபாய் கொடுத்தால், 500 ரூபாயை அள்ளிக் கொடுக்கும் நாடு ஒன்றும் இருக்கிறது. இந்த நாட்டுடன் இந்தியா பழங்காலத்தில் இருந்தே நல்ல உறவை கடைபிடித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அமெரிக்காவின் பொருளாதார தடைகளால், அந்த நாட்டின் நிலைமை மோசமடைந்து வருகிறது. அதனால்தான் இந்த நாட்டில் 1 இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு சமம்.
அந்த நாடு ஈரான் தான். பொருளாதாரத்தில் வலுவாக இருந்து, உலக வல்லரசு நாடுகளுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் வகையில் இருந்தாலும், அதன் நாணய மதிப்பு மிகவும் பாதாளத்தில் இருக்கிறது. ஈரான் பணத்தை அந்நாட்டினர் ரியால்-இ-ஈரான் என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் ஈரான் ரியால் என்று அழைக்கப்படுகிறது.
ஈரானின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தாலும், இந்தியாவுடனான உறவு தொடர்கிறது. இருப்பினும், ஒரு இந்திய ரூபாய் 507.22 ஈரானிய ரியாலுக்கு சமம். அதாவது, 10,000 ரூபாயுடன் இந்தியர் ஒருவர் ஈரானுக்கு சுற்றுலா சென்றால், அந்த நாட்டில் சொகுசாக தங்கி, வசதியாக பயணிக்கலாம்.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் மட்டுமே, ஈரான் நாடு, அவர்களின் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் செய்து வருகிறது. அமெரிக்காவும் தொடரும் பகையால், அமெரிக்கா டாலர்களை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால், அமெரிக்க டாலரை வைத்திருப்பது, இந்த நாட்டில் மிகப்பெரிய குற்றம். இந்த தடையின் காரணமாகவே, ஈரானில் சட்டவிரோதமாக, அமெரிக்க டாலர்களை கடத்தும் தொழில் செழித்தோங்கியுள்ளது.
Read more ; “மருத்துவ நுழைவு தேர்வை மாநில அரசே நடத்த வேண்டும்!!” – மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்