முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரசு ஊழியர்கள் மீது வழக்கா..? இனி அனுமதி பெற வேண்டும்..!! உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு..!!

The Supreme Court has issued an order to the enforcement department to obtain permission before prosecuting government employees, which has caused a stir.
03:42 PM Nov 06, 2024 IST | Chella
Advertisement

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் வழக்கு தொடர்ந்ததாக கூறி, அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை தெலங்கானா உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ். ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு, “குற்றவியல் நடைமுறை சட்டம் 171ன் படி, அரசு ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்ய உரிய முன் அனுமதி பெறுவது அவசியமானது” என்று தெரிவித்தது. பின்னர் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எந்தவித அனுமதியும் பெறாமல் அமலாக்கத்துறை அரசு ஊழியர்கள் மீது சரமாரியாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில், இதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது அமலாக்க துறைக்கு பெரும் பின்னாடைவாக பார்க்கப்படுகிறது.

Read More : செம குட் நியூஸ்..!! ரூ.450-க்கு கேஸ் சிலிண்டர்..!! ரேஷன் கார்டு ஆதார் கார்டு..!! உடனே இதை பண்ணுங்க..!!

Tags :
அமலாக்கத்துறைஅரசு ஊழியர்கள்உச்சநீதிமன்றம்
Advertisement
Next Article